செமையா இருக்கு கண்ணா! இளம் இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Saturday,September 14 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பார் என்பதும், அவர்களது படங்களை பார்த்து பாராட்டுவார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனரும் ‘துருவங்கள் பதினாறு, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களுக்கு தற்போது ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் தற்போது இயக்கி வரும் ‘மாஃபியா’ என்ற படத்தின் டீசர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக திரையிடப்பட்டது. இந்த டீசரை பார்த்த ரஜினிகாந்த், ‘பிரிலியண்ட் வொர்க் கண்ணா, செமையா இருக்கு’ என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினியுடனான சந்திப்பை ஏற்படுத்தி தந்த கடவுளுக்கு எனது நன்றி என்றும், அவருடைய மனிதநேயத்தை பார்த்து வியந்தேன் என்றும், தலைவர் என்றால் அவர்தான் தலைவர்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், பிரச்சன்னா உள்பட பலர் நடித்து வரும்’மாஃபியா’ திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

More News

பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்கள் எடுத்த உறுதிமொழி

பேனர் கலாச்சாரம் என்றாலே அனைவரும் அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கின்றோம். அரசியல்வாதிகளுக்கு இணையாக மாஸ் நடிகர்களுக்கு

சேரனுக்கு ரகசிய அறை, கவினுக்கு ஒரு பப்ளிக் அறை: கமல்ஹாசனின் சொல்லாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களிலும் கமல் தோன்றி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வரும் நிலையில் இன்றும் அவர் தனது வழக்கமான சொல்லாடலால் பார்வையாளர்களை கவர்கிறார்

சுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவருக்கு நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி

நேற்று முன் தினம் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்லத்திருமண விழாவிற்காக சாலையில் வைக்கப்பட்ட பேனர் திடீரென கீழே விழுந்ததால் எதிர்பாராதவிதமாக பலியானவர் சுபஸ்ரீ என்ற இளம்பெண்.

நானும் அப்பாவும் இணைந்து கொடுக்கும் சர்ப்ரைஸ்: யுவன்ஷங்கர் ராஜா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆன பின்னரும்,

'தளபதி 64' நாயகியின் வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.