close
Choose your channels

செமையா இருக்கு கண்ணா! இளம் இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

Saturday, September 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பார் என்பதும், அவர்களது படங்களை பார்த்து பாராட்டுவார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனரும் ‘துருவங்கள் பதினாறு, நரகாசுரன் போன்ற படங்களை இயக்கியவருமான இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களுக்கு தற்போது ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் தற்போது இயக்கி வரும் ‘மாஃபியா’ என்ற படத்தின் டீசர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்காக திரையிடப்பட்டது. இந்த டீசரை பார்த்த ரஜினிகாந்த், ‘பிரிலியண்ட் வொர்க் கண்ணா, செமையா இருக்கு’ என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினியுடனான சந்திப்பை ஏற்படுத்தி தந்த கடவுளுக்கு எனது நன்றி என்றும், அவருடைய மனிதநேயத்தை பார்த்து வியந்தேன் என்றும், தலைவர் என்றால் அவர்தான் தலைவர்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், பிரச்சன்னா உள்பட பலர் நடித்து வரும்’மாஃபியா’ திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.