ஆகஸ்டில் தொடங்குகிறது ரஜினி-ரஞ்சித் படம்

  • IndiaGlitz, [Tuesday,July 14 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது.

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொடர்ந்து ஒருமாதம் இடைவெளி இன்றி படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும், இந்த முதல்கட்ட படப்பிடிப்பிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கபட்டுவிடும் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் மலேசிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு அங்குள்ள வயதான டான் ஒருவர் செய்யும் உதவிகளும், அதனால் எதிரி டானுக்கு ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசிய அரசியல்வாதிகள் குறித்த கேரக்டர்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

More News

கமலுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த மாதவன்

ஒருபக்கம் இந்தியாவின் மாபெரும் பட்ஜெட் படமான 'பாகுபலி' ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் குறுகிய கால தயாரிப்பும், மீடியம் பட்ஜெட் படமுமான 'பாபநாசம்' படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்துள்ளது. சிறப்பாக திரைக்கதை மற்றும் உலக நாயகனின் வித்தியாசமான நடிப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.....

இஞ்சி இடுப்பழகிக்காக 12 கிலோ எடை கூடிய அனுஷ்கா

முன்னணியில் இருக்கும் நடிகைகள் பொதுவாக தங்கள் உடலமைப்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிர முயற்சிகள் எடுத்து கொள்வார்கள்......

விஜய்யின் வித்தியாசமான கெட்டப். பர்ஸ்ட் லுக் வரை ரகசியமா?

சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தை முடித்துவிட்ட விஜய், தற்போது தனது 59வது படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்......

அரை நிர்வாணக் காட்சியில் ராதிகா அப்தே?

தமிழில் சில படங்களில் நடித்து நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடிகொண்டிருக்கும் ராதிகா அப்தே அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கினார்...

ஆகஸ்ட் 7ல் ரிலீஸாகிறது பாலா படம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, சமீபத்தில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் என்பது தெரிந்ததே...