என் போட்டோவையும் வைத்தும் கதை சொல்வார்கள்.. ஏமாற வேண்டாம்.. ராஜ்கிரண் எச்சரிக்கை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபலங்களுடன் போட்டோ எடுத்தது போல் போட்டோஷாப் செய்து ஏமாற்றி வருவதாக பரபரப்பான பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய போட்டோவை வைத்தும் பலர் கதை சொல்லலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள், யாரும் ஏமாந்து விட வேண்டாம்’ என நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலர், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலர் , என் அபிமானிகள் என்றும் சிலர் , என் தீவிர ரசிகர்கள் என்றும் சிலர் , பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம்.
இந்த மாதிரி புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்துக்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள்.
என்னிடம் எந்த சிபாரிசும் எடுபடாது, என் விஷயங்களில் நான் மட்டுமே முடிவெடுக்கிறேன், என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது என்பதற்காகவே இந்த பதிவு’ என ராஜ்கிரண் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com