'SK 21' படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி..!

  • IndiaGlitz, [Tuesday,June 06 2023]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’SK 21' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய நிலையில் திடீரென அம்மாநில அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தியதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’SK 21'.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் காஷ்மீர் சென்ற நிலையில் திடீரென அங்குள்ள அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்தினர். டெல்லியில் ஜி 20 மாநாடு நடக்க இருப்பதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாகவும் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து அறிவிப்பை ராஜ்குமார் பெரியசாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் ஒரு சில நாட்களில் காஷ்மீர் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓடிடியில் சாந்தனுவின் 'இராவண கோட்டம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான 'இராவண கோட்டம்' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்

ஏகே மோட்டோ ரைடு நிறுவனத்திற்காக கோடிக்கணக்கில் பைக் வாங்கும் அஜித்.. ஆச்சரிய தகவல்..!

நடிகர் அஜித் ஏகே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அந்த நிறுவனத்திற்காக அவர் கோடி கணக்கில் மதிப்பிலான பைக்குகளை வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை

ரிச்சர்டை காதலிப்பது உண்மையா? யாஷிகா அம்மா விளக்கம்..!

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்

500 நடன கலைஞர்களுடன் விஜய்யின் அறிமுக பாடல்.. இன்னொரு 'வாத்தி கம்மிங்கா?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம்

கார்த்தி-லிங்குசாமியின் 'பையா 2' படத்தில் மீண்டும் ஒரு திருப்பம்.. 

கார்த்தி நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. தமன்னா நாயகி ஆக நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய