லாஸ்ட் பெஞ்ச் யாருக்குன்னு மோதி பாத்துருவோமா.. 'பாபா பிளாக்‌ஷிப்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

பட்டிமன்றம், விஜய் டிவி மற்றும் யூடியூப் புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பாபா பிளாக் ஷீப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பள்ளி மாணவ மாணவிகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள் ஆகிவற்றை அழகாக இணைத்து திரைக்கதையாக உருவாக்கி ’பாபா பிளாக்ஷிப்’ என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’சண்டியர்’ புகழ் நடிகை அபிராமி நடிக்கிறார்.

அயாஸ் நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, 'விருமாண்டி' அபிராமி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி, போஸ் வெங்கட். வினோதினி வைத்தியநாதன். சேட்டை ஷெரீப், மதுரை முத்து, கேபிஒய் பழனி, ஓஏகே சுந்தர், நக்கலைட்ஸ் பிரசன்னா, உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் டிரைலர் முழுக்க முழுக்க பள்ளியில் நடைபெறும் மாணவ மாணவிகளின் ஜாலியான மற்றும் ஆக்ரோஷமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சந்தோஷ் தயாநிதி இசையில், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இயக்குனராக அறிமுகம் ராஜமோகனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.

More News

செம எணர்ஜியுடன் லண்டனில் வைப் செய்த நடிகை ஸ்ருதிஹாசன்… வைரல் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ருதிஹாசன் லண்டன் சென்றுள்ள நிலையில் புதிய எணர்ஜியுடன் இருப்பதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார்

நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பாக பேசப்படும் தகவல்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பை பெற்றுவரும் நடிகை காஜல் அகர்வால் ஒரு முக்கிய காரணத்திற்காக சினிமாவை விட்டு விலக இருக்கிறார்

காமெடி நடிகர் பாவா லட்சுமணனுக்கு என்ன ஆச்சு.. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி தகவல்..!

தமிழ் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கால் கட்டை விரல்

விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்தது..அதுல சூரி...!!!! - இயக்குனர் வெற்றிமாறன்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023  நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது  .

என் மனைவி இல்லனா செத்துருப்பேன் - ரோபோ சங்கர்

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டார் அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார் .