மல்யுத்த வீராங்கனையுடன் மோதி உடம்பை புண்ணாக்கிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,November 13 2018]

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்பது பாலிவுட் திரையுலகம் ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் தேவையில்லாமல் மோதி அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநித்தில் WWE வீரர் தி கிரேட் காளியின் மல்யுத்த அகாடமியில் CWE என்ற மல்யுத்த போட்டி நடந்தது. இந்த போட்டியின் தொடக்க நாளில் நடிகை ராக்கி சாவந்த் நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடியதுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மல்யுத்த போட்டி ஒன்றில் ரொம்பல் என்ற வீராங்கனை வெற்றி பெற்றபோது திடீரென மேடையேறிய ராக்கி சாவந்த் தன்னுடன் மோதுமாறு மல்யுத்த வீராங்கனைக்கு சவால்விட்டார்.

தொழில்முறை வீராங்கனையான ரொபல், ஒரே ஒரு குத்துவிட்டவுடன் சுருண்டு விழுந்து மயக்கமடைந்த ராக்கியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து சோகத்துடன் ராக்கி சாவந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ராக்கி சாவந்த், சரத்குமார் நடித்த 'கம்பீரம்' என்ற தமிழ்ப்படத்திலும் பல இந்தி படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

யார் பலசாலி? ரஜினியின் பதிலுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது 'பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இந்த பதிலில் அவர், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை போரில் எதிர்க்கின்றார்

நயன்தாரா-சமந்தா: 'விஜய் 63' படத்தின் நாயகி யார்?

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாகி வசூலை அள்ளிக்குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.

அரசியல்வாதிகளே! என் படத்தையும் கொஞ்சம் கவனியுங்க: ஆர்.ஜே.பாலாஜி

தற்போது ஒரு படம் சூப்பர் ஹிட் ஆகவேண்டும் என்றால் அந்த படத்திற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் விவாகரத்து: அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு. 'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'ராட்சசன்' வரை பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர்.

நடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 2வது மகளும், 'கோச்சடையான்', 'விஐபி 2' படங்களின் இயக்குனருமான செளந்தர்யா, கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார்.