நடிகையின் வயிற்றில் இருப்பது என் குழந்தை: யூடியூப் பிரபலம் பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

லண்டன் தொழிலதிபரை திருமணம் செய்த நடிகையின் வயிற்றில் இருப்பது எனது குழந்தை என யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழில் 'என் சகியே', 'முத்திரை' போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியவரும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவருமான நடிகை ராக்கி சாவந்துக்கு சமீபத்தில் லண்டன் தொழிலதிபர் ரித்தேஷ் என்பவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தி'ற்கு பின் கணவர் லண்டனுக்கு சென்றுவிட்டதாகவும் ஒருசில படங்களின் கமிட்மெண்ட் முடிந்தவுடன் தானும் தனது கணவர் இருக்கும் லண்டனுக்கு செல்லவிருப்பதாகவும் ராக்கி சாவந்த் கூறி வருகிறார். ஆனால் ராக்கி சாவந்துக்கு இன்னும் திருமணமே நடைபெறவில்லை என்றும் அவர் பரபரப்புக்காக இவ்வாறு கூறுவதாகவும் பாலிவுட் திரையுலகில் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவரும், ராக்கி சாவந்த்தின் காதலர் என்று கூறப்பட்டவருமான தீபக் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'ராக்கிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், ஆனால் தற்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கின்றார் என்றும், அவருடைய வயிற்றில் உள்ள இருப்பது என் குழந்தை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராக்கி சாவந்துக்கு லண்டன் தொழிலதிபருடன் திருமணம் ஆனது உண்மையா? அல்லதி தீபக் குழந்தையை வயிற்றில் சுமப்பது உண்மையா? என்பது தெரியாமல் நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 

More News

 சாக்சி, அபிராமி, மோகன் வருகை: கவின் மட்டும் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் சாக்சி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூவரும் சிறப்பு விருந்தினர்களாக வருகை தரவிருப்பதாக நேற்றே நாம் பார்த்தோம்.

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்

வனிதாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ்மேட்ஸ்: தொடரும் சேரனின் மெளனம்தேசிய விருது என்ற உயரம் பெற்ற சேரனும், பல படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்ற ஷெரினும்

வாட் நான்சென்ஸ் பிக்பாஸ்: மைக்கை கழட்டி போட்ட வனிதா!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக மீண்டும் வனிதா நுழைந்ததில் இருந்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது தெரிந்ததே. வனிதாவின் வத்திகுச்சி வேலையால் சாக்சி

'ஜீவி' கதாசிரியர் இயக்கும் முதல் படத்தின் டைட்டில் அறிவிப்பு

வெற்றி நடிப்பில் கோபிநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜீவி'. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில்

விஜய்க்கு நெருக்கமான ஸ்டில் போட்டோகிராபர் சாலை விபத்தில் மரணம்!

நடிகர் விஜய்க்கு நெருக்கமானவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞருமான ஸ்டில் கேமராமேன் சிவா என்பவர் நேற்று தேனி அருகே விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.