close
Choose your channels

திருமணம் பற்றி மனம்திறந்த இளம் நடிகை ரகுல் ப்ரீத் சிங்… வைரல் தகவல்!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் “தீரன் அதிகாரம் ஒன்று“ சூர்யாவுடன் என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கூடவே பாலிவுட் சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் அயுஷ்மான் குரானாவுடன் “டாக்டர் ஜி“, சித்தார்த் மல்கோத்ரா மற்றும் அஜய்தேவ்கான் ஆகியோருடன் இணைந்து “தேங் காட்“, “மேடே“, “அட்டாக்“, “சித்ரவாலி“, “மிஷன் சிண்ட்ரெல்லா“ எனப்பல திரைப்படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இவர் குறுகிய காலத்தில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதையடுத்து சமீபத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்தநாளுக்கு தயாரிப்பாளர் ஜாக்கி பாஹ்னனி தனது இன்ஸ்டாவில் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார். கூடவே தனது அன்பான காதலையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதையடுத்து நடிகை ரகுல் நானும் ஜாக்கியும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறோம் என்று ரசிகர்களிடம் தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார்.

தற்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடம் திருமணம் பற்றி கேள்வியெழுப்பிய போது, நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தை பொதுவெளியில் பகிர்ந்து கொண்டேன். காரணம் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். மேலும் திருமணம் நடக்கும்போது மற்ற விஷயங்களைப் போலவே நான் அதைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்போது நான் எனது தொழிலில் கவனம் செலுத்துகிறேன். ஏனென்றால் நான் இங்கே இருக்கிறேன்“ எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தத் தகவலையடுத்து 31 வயதான நடிகை ப்ரீத் சிங் தற்போது தெலுங்கு, இந்தி எனப் பிசியாக நடித்து வருகிறார். இதனால் திருமணத்தைப் பற்றி இப்போதைக்கு முடிவெடுக்க மாட்டார் என்றே சினிமா வட்டாரம் கருத்துத் தெரிவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.