close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி?

Sunday, July 21, 2019 • தமிழ் Comments

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் இரண்டாம் படம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்தனர் என்பது குறித்த செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகி இந்த படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பிரபல நடிகை ரகுல்ப்ரித்திசிங் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிரது. இவர் ஏற்கனவே சூர்யா நடித்த 'என்ஜிகே 'மற்றும் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', தேவ்' உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz