'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி?

  • IndiaGlitz, [Sunday,July 21 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் இரண்டாம் படம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்தனர் என்பது குறித்த செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நாயகி இந்த படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பிரபல நடிகை ரகுல்ப்ரித்திசிங் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிரது. இவர் ஏற்கனவே சூர்யா நடித்த 'என்ஜிகே 'மற்றும் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று', தேவ்' உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தனியா இருப்பிங்களா? கூட்டணி வைப்பீங்களா? கமலிடம் அசத்தல் கேள்வி 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று பார்வையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் பிக்பாஸ்  போட்டியாளர்களில் ஒருவரிடம் கேள்வி கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது.

'ஆடை' என் படத்தின் கதை: பார்த்திபன்

நடிகை அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது 

நீ எதிரியா? உதிரியா? பதறியே வா: 'தீ முகம் தான்' பாடல் வரிகள்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் 'தீ முகம் தான்' என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த அட்டகாசமான ஆவேசமான பாடல் வரிகளை தற்போது பார்ப்போம்

கமல் கூறிய வாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு பரபரப்பாக இருந்தது என்றால் அதற்கு கவினின் முக்கோண காதல் கதை தான் காரணம். சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரையும்