50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மகத், நடிகை ஆர்த்தி, இயக்குனர் ஹரி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள்

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தில் 50% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ்பாபுவுடன் ‘ஸ்பைடர்’, சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, கார்த்தியுடன் ‘தேவ்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ உள்பட பல படங்களில் நடித்த ரகுல், தற்போது ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார். இதுவரை அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது அவர் ரூ.75 லட்சத்திற்கு நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரகுல் ப்ரீத்திசிங் போலவே முன்னணி நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது

More News

பீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது

பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை

'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்!

கௌதம் கார்த்திக், யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய அடல்ட் காமெடி திரைப்படமான ;இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படம்

வடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்!!! ரகசியங்கள் புதைந்த வெற்றிக்கதை!!!

இனம் கடந்து, மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் தனது உடல் மொழியால் ரசிக்க வைக்கும் ஒரு சிறந்த கலைஞராக, சிறந்த காமெடியனாக தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் சிறுவன் ஒசிட்டா ஐஹீம்.