close
Choose your channels

சமநிலைக்கு இப்படி ஒரு விளக்கமா? வைரலாகும் இளம் நடிகையின் யோகா புகைப்படம்!

Wednesday, January 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது தற்போது ஹிந்தியில் கால் பதித்து இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீத் சிங். இவர் வொர்க் அவுட் மற்றும் யோகாவில் அதிக நாட்டம் உள்ளவர். இந்நிலையில் இவர் செய்யும் வொர்க் அவுட் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது யோகா செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த யோகா நிலைக்கு நடிகை ரகுல்ப்ரீத் சிங் அளித்து உள்ள விளக்கம்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அதில் “சமநிலையாக இருப்பது நீங்கள் கண்டுபிடித்த ஒன்றல்ல… இது நீங்கள் உருவாக்கும் ஒன்று. என்னை சமநிலையாக உணர வைப்பதற்கு நன்றி” என பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகை ரகுல்ப்ரீத் சிங் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் “தேவ்”, “தீரன்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்து இருந்தார். அதேபோல நடிகர் சூர்யாவுடன் “என்.ஜி.கே” படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் “அயலான்” படத்திலும் நடிகர் கமல்ஹாசனின் “இந்தியன் 2“ படத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “மே டே” படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அந்தப் படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.