தனது புது திரைப்படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

பாலிவுட்டில் காண்டம் பரிசோதகராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் “சத்ரவாலி“ திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஏற்கனவே ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது அந்தப் படம் குறித்த அப்டேட்டை நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் இயக்குநர் தேஜாஸ் தியோஸ்கர் இயக்கத்தில் ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP மூவிஸ் தயாரிப்பில் “சத்ரவாலி“ திரைப்படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் ஆணுறை பரிசோதகராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தற்போது நடிகை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமாகத் தகவல் வெளியிட்டு உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் சினிமாவில் பிசியான நடிகையாக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் “சத்ரவாலி“ திரைப்படத்தின் லீட் ரோலில் அவர் நடித்து முடித்துள்ளார். இதுகுறித்து, நான் ரசித்த மற்றும் நம்பிய ஒன்றை உருவாக்கியதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

31 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் நடிகர் ஜாக்கி பாக்னானியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் ஆப்ரகாமுடன் இணைந்து நடித்துள்ள “Attack“ திரைப்படம் வரும் ஜனவரி 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மேலும் அஜய்தேவ்கனின் இயக்கத்தில் இவர் நடித்த “ரன்வே 34“ திரைப்படம் வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தொடர்ந்து ஆயுஷ்மான் குரானா இயக்கத்தில் “டாக்டர்ஜி“ திரைப்படத்திலும் அனுபூதி காஷ்யப் இயக்கத்தில் The Campus Comedy திரைப்படத்திலும் இவர் இணைந்து நடித்துவருகிறார்.

More News

கருத்து வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்… உற்சாகத்தில் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து செட்டிலான பிரபலங்களில் ஒருவர் நடிகை சன்னிலியோன். ஆபாசப் படங்களில்

14 வயது சிறுமியின் பாலியல் வழக்கு… சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்துவரும் யாஷிர் ஷா

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தாவின் கூல் பதில்!

கீழ்த்தரமாக விமர்சனம் செய்த நெட்டிசனுக்கு சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூலாக பதில் அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

சசிகுமாரின் 21வது படத்தின் சூப்பர் அப்டேட்!

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.