வித்தியாசமான முறையில் பீட்டாவிற்கு விளம்பரம் செய்த ரகுல் ப்ரித்திசிங்

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

சூர்யா நடித்த ’என்ஜிகே’, கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இந்த நிலையில் இவர் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பீட்டா இந்தியா என்ற அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். முழு நிர்வாணம் போல் இருக்கும் அந்த புகைப்படத்தை காய்கறிகள் வைத்து அவரது உடல் மறைக்கப்பட்டது போல இந்த புகைப்படம் உள்ளது.

இதில் ’விலங்குகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு முழுக்க முழுக்க சைவத்துக்கு மாறி இந்த உலகை காப்போம்’ என்று ரகுல் ப்ரீத்தி சிங் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளுக்கு காப்போம் என்பதை கூற வித்தியாசமான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத்தி சிங், விலங்குகளின் ஆதரவு அமைப்பான பீட்டா இந்தியாவுக்கு ஆதரவான இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் பாராட்டுகளும் இன்னொருபுறம் விமர்சனமும் செய்து வருகின்றனர்.

More News

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ரீஎன்ட்ரி ஆகும் ரோஜா: பரபரப்பு தகவல் 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் 'விக்ரம் வேதா', 'பேட்ட', 'மாஸ்டர்' உட்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா பரபரப்பு முடிந்த பின்னர் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்: போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் !!!

உலகப் பிரபலங்களில் யார் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.

நிறவெறி கொடுமையானது: ஜார்ஜ் ஃபிளாய்டு மரணத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர்!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி உயிரிழந்தார்.

மரத்தாலான கை கழுவும் இயந்திரம்: 9 வயது சிறுவனுக்கு ஜனாதிபதி விருது 

கென்ய நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மரத்தாலான கை கழுவும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்ததற்காக அந்நாட்டின் அதிபரிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார்