close
Choose your channels

யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் ரகுல் ப்ரீத்திசிங்: பரபரப்பை ஏற்படுத்திய ஃபர்ஸ்ட்லுக்!

Saturday, November 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் ப்ரீத்திசிங் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’ சூர்யா நடித்த ’என்ஜிகே’ மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்திசிங். இவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட்டில் உருவாகவிருக்கும் Chhatriwali என்னும் படத்தில் ரகுல் ப்ரீத்திசிங் இதுவரை எந்த நடிகையும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் அவர் காண்டம் டெஸ்டர் ஆக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலை இல்லாத பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்த பணியை அவர் எப்படி சவாலுடன் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் முழுக்க முழுக்க காமெடி கலந்து, எந்த வித ஆபாசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படம் ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு பாலிவுட்டில் ஒரு மிகப் பெரிய புகழை பெற்றுத் தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.