close
Choose your channels

'தி ஃபேமிலிமேன் 2' சமந்தாவை பாராட்டிய சூர்யா-கார்த்தி பட நாயகி!

Tuesday, June 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒரு சிலர் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா, சீமான் உள்பட ஒரு சிலர் இந்த தொடரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடருக்கு திரை உலக பிரமுகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் இந்த தொடரை பார்த்து பாராட்டிய நிலையில் தற்போது சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ரகுல் ப்ரீத்தி சிங் தனது சமூக வலைத்தளத்தில் இந்த தொடரை பாராட்டியுள்ளார்.

’தி ஃபேமிலிமேன் 2’ தொடரில் மனோஜ்பாஜ்பாய் நடிப்பு மிகவும் சூப்பராக இருப்பதாகவும் அவரது நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றும் அதேபோல் சமந்தாவின் நடிப்புக்கு தான் தலை வணங்குவதாகவும் என்று தெரிவித்துள்ளார். ராஜி என்ற கேரக்டரை எவ்வளவு திறமையாக சமந்தா கொண்டு சென்றுள்ளார் என்றும் தங்களது குடும்பமே சமந்தாவுக்கு ரசிகைகளாக மாறி விட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் ’தி ஃபேமிலிமேன் 2’ தொடருக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் மட்டுமன்றி பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ள இந்த தொடர் அமேசான் ஓடிடியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.