close
Choose your channels

ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்கும் சூர்யா-கார்த்தி பட நாயகி

Thursday, July 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே மற்றும் கார்த்தி நடிப்பில் ரஜத் ரவிசங்கர் இயக்கி வரும் படம் ஒன்றிலும் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரித்திசிங். சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தெலுங்கில் உருவாகி வருவது தெரிந்ததே. என்.டி.ஆர் கேரக்டரில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். என்.டி.ஆரின் மனைவி கேரக்டரில் வித்யாபாலன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் என்.டி.ஆர், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தபோது அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய கேரக்டரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக வருவதாகவும், இந்த கேரக்டரில் நடிக்க ரகுல் ப்ரித்திசிங் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் எதிர்பாராமல் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தயாரிக்க அவரது கணவர் போனிகபூர் திட்டமிட்டு வருவதாகவும் இந்த படத்தில் ஸ்ரீதேவி கேரக்டரில் நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டி போடுவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.