close
Choose your channels

'96' திரைப்படம்: மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த ராம்-ஜானு

Sunday, October 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளிவந்த '96' திரைப்படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் தங்களுடைய பள்ளி வாழ்க்கையை நினைக்காமல் இருக்க முடியாது. 'ராம்' மற்றும் 'ஜானு' கேரக்டர்களில் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் நடித்தார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்தார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக 'ஜெஸ்ஸி' கேரக்டருக்கு பின்னர் த்ரிஷாவுக்கு 'ஜானு' கேரக்டர் மிகப்பெரிய புகழை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மார்க்கெட்டில் ராம் மற்றும் ஜானு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பொதுமக்கள் இந்த பொம்மைகளை விருப்பத்துடன் வாங்கி செல்வதாக கூறப்படுகிறது. ரஜினி படத்திற்கு பின்னர் ஒரு படத்தின் கேரக்டரின் பொம்மைகள் விற்பனையாவது இந்த படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரொம்ப தூரம் போயிட்டியா ராம்' என்ற ஜானு கேட்க 'உன்னை எங்க விட்டேனோ அங்கேதான் நிக்கிறேன் ஜானு' என்று ராம் கூறுவது போன்று உள்ள பொம்மைகள் குறித்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.