இனி இந்திய சினிமா 'பாகுபலிக்கு முன் - பாகுபலிக்கு பின்' என்று பார்க்கப்படும். ராம்கோபால் வர்மா

  • IndiaGlitz, [Saturday,April 29 2017]

நேற்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒரு தென்னிந்திய படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

'பாகுபலி 2' திரைப்படம் யானை அல்ல, டைனோசர். அதனால்தன் நாய், புலி, சிங்கம் போன்ற இயக்குனர் ஓடி ஒளிந்து கொண்டனர். 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை காண சகிக்காமல் பாலிவுட் திரையுலகினர் தங்கள் காதுகளை மூடிக்கொள்கின்றனர்.

பாலிவுட் பட உலகின் கான்கள், ரோஷன்களை விட ராஜமெளலி பெரியவர். உலகில் உள்ள காலத்தை கிமு, கிபி என்று பிரிக்கப்பட்டது போல இனிமேல் இந்திய சினிமா பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று பார்க்கப்படப் போகிறது. பாகுபலியை விரும்பும் அனைத்து இந்திய மக்களும் ராஜமெளலியை போன்ற வைரத்தை கண்டறிந்தற்காக கரண் ஜோகரனின் காலைத் தொட வேண்டும். இவ்வாறு ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.