ஆபாச நடிகையாகும் ஸ்பீல்பெர்க் மகள் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜுராசிக் பார்க் உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரது மகளான மைக்கேலா என்பவர் சமீபத்தில் ஆபாச படங்களை தயாரித்து நடிக்க இருப்பதாக அறிவித்தார் மேலும் தனது இந்த முடிவுக்கு தனது பெற்றோர் ஆதரவு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம் கோபால் வர்மா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் அவர்கள் தனது சொந்த மகள் மைக்கேலாவை ஒரு ஆபாச பட நட்சத்திரமாக மாற்றி இருப்பதைவிட ஆபாச படத்திற்கு வேறு எந்த ஒப்புதலும் தேவையில்லை என்பது எனது கருத்தாகும். இயக்குனர் ஸ்பீல்பெர்க் தன்னுடைய மகளின் முடிவை ஆதரித்துள்ளது இந்த உலகம் உண்மையில் வளர்ச்சி அடைந்து உள்ளது என்பதையே காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் கொண்ட கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது.