close
Choose your channels

இயக்குனர் ராமின் 'பேரன்பு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, January 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பேரன்பு திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'பேரன்பு' படத்தின் டிரைலர் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சூர்யா பிரதாபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.