close
Choose your channels

கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ்: ரம்பாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா தனது கணவரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 90கள் மற்றும் 2000களில் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அதன்பிறகு அவர் தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டிலாகிவிட்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கனடாவிலிருந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ள ரம்பா, தனது தோழிகளை சந்தித்து வருகிறார் என்பதும் குறிப்பாக குஷ்பூ, மீனா, சினேகா உள்ளிட்டவர்களை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் ரம்பாவின் கணவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்பாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அதில் கணவரை கட்டிப்பிடித்துக்கொண்டு ரம்பா போஸ் கொடுக்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.