மகனின் புகைப்படத்தோடு மாஸ் பெயரையும் அறிவித்த ரமேஷ் திலக்!

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ரமேஷ் திலக் என்பது தெரிந்ததே. விஜய் சேதுபதியின் ’சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற ரமேஷ் திலக், அதன்பிறகு ’நேரம்’ ’வாயை மூடி பேசவும்’ ’காக்கா முட்டை’ ’வேதாளம்’ ’கபாலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியின் ’ஆரஞ்சு மிட்டாய்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரமேஷ் திலக் கடந்த 2018ஆம் ஆண்டு ரேடியோ ஆர்ஜே நவலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ரமேஷ் திலக் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தை மற்றும் மனைவியின் புகைப்படத்தை பதிவு செய்து தனது குழந்தைக்கு ’மாயன் ராணா’ என்ற பெயர் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து ரமேஷின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, இந்த மாஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி 65' நாயகியின் ஹாட் போட்டோஷூட்: வைரல் வீடியோ!

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே.

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷுடன் நடித்த நடிகை இவர்: யாரென தெரிகிறதா?

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மகன், மருமகள் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையில் 'முந்தானை முடிச்சு' நடிகை!

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது மகன், மருமகள், பேரனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக சமீபத்தில்

ஜுன்- ரேஷன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம்… வெளியான புது அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நாட்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8-12 மணி வரை இயங்கும்

1-8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்... மீண்டும் பள்ளி திறப்பு எப்போது?

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் அனைத்து மாணவர்களும் (2020-202) இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.