புதிய நோய்கள்… சென்னைக்கு புயல் பாதிப்பு… புத்தாண்டு குறித்த பஞ்சாங்கப் பலன்களால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஒவ்வொரு வருடமும் ராமேஸ்வரம் கோவில் சன்னிதானத்தில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி அந்தக் கோவில் நிர்வாகம் சார்பாக நடத்தப்படுகிறது. சோமாஸ்கர் சன்னதிக்கு முன்பு நடக்கும் இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பரவலான ஒரு விஷயமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்வில் சொல்லப்படும் பலன்களுக்கும் மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் பகல் 12 மணிக்கு ராமேஷ்வரம் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிலவ வருஷத்திய ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அந்தப் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள சென்னைக்குப் புயல் பாதிப்பு, புதிய பல நோய்கள் மக்களை பாதிக்கும் போன்ற சில பொதுவான பலன்கள் மக்கள் மத்தியில் தனிக்கவனம் பெற்று இருக்கின்றன.

கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தின் வருஷ பலன்கள்- பிலவ ஆண்டு வெண்பாவின் மழை குறைவாக இருப்பதும், மழை நீர் சேமிப்பு இன்றி கடலில் கலக்க நேரும். மேகாபதி செவ்வாய் சுக்கிரன் வீட்டிலும் சுக்கிரன் செவ்வாய் வீட்டிலும் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் பல புதிய வியாதிகள் உற்பத்தி ஆகும். சித்திரை மீ வருடப்பிறப்பு புதன்கிழமை வருவதால் நல்ல மழையும், ஆடி மீ 05உ. புதன்கிழமை வருவதால் நல்ல மழை பொழிய நல்ல வாய்ப்புள்ளது.

நாட்டில் மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை கணக்கிட்டு செயல்படுத்த நேரும். புதிய வைரஸ் நோய்களால் கால்நடைகள் கடுமையாகப் பாதிக்க நேரும். சாலைகளில் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கும். மருத்துவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அயல்நாட்டில் புழுதி காற்று சூறாவளி மற்றும் பலமாகத் தாக்க நேரும். தான்யாதிபதி குரு 2 – ஆம் ஸ்தானத்தில் இருப்பதால் அனைத்து வியாபாரிகளும் ஆன்லைன் படிதான் வியாபாரம் செய்ய நேரும்.

மளிகை- காய்கறி- கனிவகை- தான்யம் போன்றவை யாவும் விலை அதிகரிக்கும். நிரஸாதிபதி சுக்கிரன் மேஷத்தில் நட்பு கிரஹமாக இருப்பதால் கோவில் அச்சர்களுக்கு யோகம். அறநிலைத் துறையினால் மாதச் சம்பளம் கணிசமாக கிடைக்கும். ஆக இந்த பிலவ ஆண்டு பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தும்.

அயல்நாட்டு ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா ஒத்துழைப்புடன் மத்திய அரசாங்கம் பல முதலீடுகளை ஏற்க நேரும். கள்ளர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். வழக்கறிஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டாகும். நிலுவையில் உள்ள வழக்குகள் உடனுக்குடன் முடிக்க நேரும்.

மேலும் புதிய பல நோய்கள் ஏற்பட்டு மக்களுக்கு பல நோய்கள் கடுமையாகப் பாதிக்க நேரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சி பிடிக்க நேரும். குற்றம் புரிபவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இதுபோன்ற பலன்கள் ராமேஷ்வரம் கோவிலில் வாசிக்கப்பட்டது. இதில் நோய்களைக் வைரஸ் நோய்களைக் குறித்து அதிகமாகக் கூறியுள்ளதால் சிலர் கலக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்

More News

ஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ!

நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது ஒரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக கிரிக்கெட் கிரவுண்டிற்குள் இருந்து கொண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரியான் பராக் நடனம் ஆடி மகிழ்ந்து இருக்கிறார்

காமெடி நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றுவாரா தோனி? இன்று பஞ்சாபுடன் பலப்பரிட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் இருக்குமா?

நேற்று புகார் அளித்த நடிகை ராதா இன்று வாபஸ்: என்ன நடந்தது?

தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக நேற்று 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக திரைப்படம்: ராஜ்கிரண் அறிவிப்பு

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 30 ஆண்டுகள்