சொர்க்கம் சென்று ஸ்ரீதேவியை கைது செய்வீர்களா? காவல்துறைக்கு ராம்கோபால் வர்மா கேள்வி!


Send us your feedback to audioarticles@vaarta.com


சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியை பார்க்க கூட்டம் கூடிய போது மூன்று பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும், அப்படி என்றால் அந்த மூன்று பேரின் மரணத்திற்கு காரணம் என்று கூறி சொர்க்கத்திற்கு சென்று ஸ்ரீதேவியை கைது செய்வீர்களா என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா, அல்லு அர்ஜுன் கைது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்த 'புஷ்பா 2' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தை பார்க்க தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்த ரேவதி என்ற பெண் நெரிசலால் உயிரிழந்தார். இதனை அடுத்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜுன் கைதுக்கு பல திரையுலக பிரபலங்கள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது இயக்குனர் ராம் கோபால் வர்மா, தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், "நான் சில வருடங்களுக்கு முன்பு 'ஷனாஷனம்' என்ற படத்தை இயக்கிய போது, அதில் நடித்த ஸ்ரீதேவியை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். அப்படி என்றால் ஸ்ரீதேவி தான் அந்த ரசிகர்களின் மரணத்திற்கு காரணம் என்று போலீசார் சொர்க்கம் சென்று அவரை கைது செய்வார்களா? சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக செய்யப்படும் இந்த கைது நடவடிக்கை மிகப்பெரிய குற்றம்," என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Every STAR should STRONGLY protest against @alluarjun ‘s ARREST because for any celebrity whether it’s a FILM STAR or a POLITICAL STAR , is it a crime for them to be ENORMOUSLY POPULAR???
— Ram Gopal Varma (@RGVzoomin) December 19, 2024
3 people died in the lakhs of crowd who came to see SRIDEVI in the shooting of my film…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments