நான் என்ன செத்தா போயிட்டேன்?  தன்னை புகழ்ந்த எம்.எம்.கீரவாணிக்கு பதில் கொடுத்த பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,March 26 2023]

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற நிலையில் அவர் தனது முதல் ஆஸ்கார் விருது என பிரபல இயக்குனர் ஒருவரின் பெயரை கூற அந்த இயக்குனர் ’நான் என்ன செத்தா போய்விட்டேன்’ என்று பதில் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போதா அவர் ‘இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் எனது முதல் ஆஸ்கர் விருது என்று தெரிவித்தார். எனது ஆடியோ கேசட்டுகளை ஒருசிலர் குப்பைத் தொட்டிகள் வீசிய காலம் உண்டு, ஆனால் என்னை நம்பி மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் ராம் கோபால் வர்மாதான். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. ராம்கோபால் வர்மாவே இந்த இசையமைப்பாளர் உடன் சேர்ந்து பணிபுரிகின்றார் என்றால் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று நினைத்து மற்ற இயக்குனர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

எனவே ராம்கோபால் வர்மா தான் எனது முதல் ஆஸ்கர், இப்போது நான் வாங்கி உள்ளது இரண்டாவது ஆஸ்கர்’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ராமகோபால் வர்மா, ‘பொதுவாக இறந்தவர்களை தான் இப்படி புகழ்வார்கள், நான் இந்த புகழ்ச்சியை பார்த்தவுடன் இறந்துவிட்டதாக உணர்கிறேன்’ என்று தெரிவித்தார். அவரது இந்த டுவிட் வைரலாகி வருகிறது.

More News

'பத்து தல' படத்தில் செம ஆட்டம் போட்ட சாயிஷா.. கணவர் ஆர்யாவின் கமெண்ட் என்ன தெரியுமா?

சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

உருவாகிறதா 'கரகாட்டக்காரன் 2'? ராமராஜனுக்கு பதில் இந்த காமெடி ஹீரோவா?

ராமராஜன், கனகா நடிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான 'கரகாட்டக்காரன்' என்ற திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம்

'காலா' நடிகை ஈஸ்வரிராவ் கணவர் ஒரு இயக்குனரா? அர்ஜூனின் இத்தனை படங்களை இயக்கியுள்ளாரா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'காலா' என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஈஸ்வரி ராவின் கணவர் எல்.ராஜா என்பவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு

'கேப்டன் மில்லர்' போர்க்காட்சிகளின் வீடியோ லீக்? அதிர்ச்சியில் படக்குழுவினர்..!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே உள்ள காடுகளில்

மனைவியை விவாகரத்து செய்து விட்டேன்: 'ஜெயிலர்' பட நடிகர் அறிவிப்பு..!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளதை அடுத்து