ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? இதுவரை வெளிவராத புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,February 13 2021]

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனின் 16 வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’16 வயது போல் இளமையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் மகனுக்கு 16 வயதா? என ஆச்சரியமாக கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’படிக்காதவன்’ கமல்ஹாசன் நடித்த ’பேர் சொல்லும் பிள்ளை’ உள்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் 1986ஆம் ஆண்டு வெளிவந்த ’முதல் வசந்தம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

அதன் பின்னர் அவர் பல படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் ஒரு பாடலுக்கு நடனமாடும் கேரக்டர்களில் நடித்தார். இந்த நிலையில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’படையப்பா’ திரைப்படத்தில் அவர் அடித்த நீலாம்பரி கேரக்டர் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன்பிறகு எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் அவருக்கு உலகப்புகழ் கிடைத்தது என்பதும் இப்பொழுதும் சிவகாமி தேவி என்ற கேரக்டரை யாராலும் மறக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணவம்சி என்பவரை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் அவருக்கு ரித்திக் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் தனது மகனின் 16 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாக கூறி ரம்யா கிருஷ்ணன், தனது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

பேட்டிங்கில் எதையுமே மாத்தாதீங்க… நட்சத்திர வீரருக்கு குட் அட்வைஸ் கொடுத்த முன்னாள் கேப்டன்!

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வரும் ரோஹித் சர்மா சமீபகாலமாக ஃபாமிலேயே இல்லை எனும் அளவிற்கு தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இணையத்தை சூடாக்கிய மாளவிகா மோகனன்: வைரல் புகைப்படம்!  

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது

பிகினி உடையில் மாஸ் காட்டும் 'மாஸ்டர்' நடிகை!

43 வயதில் பிகினியில் மாஸ் காட்டும் 'மாஸ்டர்' நடிகையின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது 

ராஜதந்திரம் அனைத்தும் வீணா பேச்சா? சசிகலா விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி செக்!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தமிழக அரசியல் களத்தை மாற்றி விடுவார்,

'குக் வித் கோமாளி' தர்ஷாவின் வேற லெவல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட