பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியான ரம்யா பாண்டியன்.. 12 வயது குழந்தைக்கு அம்மாவா?

  • IndiaGlitz, [Friday,December 22 2023]

பிக் பாஸ் தமிழ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டப்பிங் பணியில் அவர் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் என்பதும் இவர் தற்போது ’விடாமுயற்சி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆரவ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பதும் இருவரும் 12 வயது குழந்தைக்கு பெற்றோர்களாக இந்த படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

90ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் பேபி கிருத்திகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காளி வெங்கட், ஜான்விஜய், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் தற்போது டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில், அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’தேன்’ மற்றும் ’தகராறு’ படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் சுகுமார் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் வளர்ந்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரெடின் கிங்ஸ்லி பிறந்தநாள்.. மனைவி சங்கீதாவின் எமோஷனல் போஸ்ட்..!

சமீபத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவு

விசித்ராவுக்கு மட்டும் அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. ஆனந்தக்கண்ணீர் மழை..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் முழுவதும் உறவினர்கள் வருகை தரும் வாரம் என்பதால் செண்டிமெண்டாக இருந்தது.

தனுஷின் 'DD3': செம்ம அப்டேட்டை வெளியிட்டதால் ரசிகர்கள் குஷி..!

 தனுஷின் 50 படமான 'D50' என்ற படத்தை அவரே இயக்கி வந்த நிலையில் இந்த படம் அவரது இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போ

இதுக்கப்புறம் எல்லாம் அவன் ஃபிரண்டே கிடையாது.. இப்படி ஒரு கப்பு வாங்கனுமா? மாயா சொன்னது யாரை?

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 3 வாரத்தில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிடும்.

பிக்பாஸ் ஷாரிக் ஹாசன் நடிப்பில் 'நேற்று இந்த நேரம்'.. ரிலீசுக்கு தயார்..

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் திரைப்படம் "நேற்று இந்த நேரம்".