நடிகராகிறாரா ரம்யா பாண்டியனின் சகோதரர்?

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியனின் சகோதரர் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியிடம் அவர் புத்திசாலித்தனமாக வாதாடி ஆஜித்துக்கு எவிக்சன் பாஸை பெற்றுக் கொடுத்ததை அனைவரும் பாராட்டினர். ஆனால் போகப்போக ரம்யாவுக்கு பிக்பாஸ் ரசிகர்களின் வரவேற்பு குறைந்தது என்பதும் குறிப்பாக ஆரியை அவர் எதிர்க்க தொடங்கிய பின் அவரை வெறுக்க தொடங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ரம்யா பாண்டியனை பார்க்க அவரது அம்மா மற்றும் சகோதரர் பரசு பாண்டியன் வந்தார்கள் என்பதும் ரம்யா பாண்டியன் சகோதரர் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசினார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ஆரியுடன் அவர் காட்டிய நெருக்கம் ரசிகர்களை கவர்ந்தது

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் சகோதரர் பரசு பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.