close
Choose your channels

அட்டகாசமான மேஜிக் ஷாட்ஸ்: ரம்யா பாண்டியனின் வைரல் வீடியோ!

Tuesday, June 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகையையும் பிக்பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் கடற்கரையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி வந்தார் என்பதும் அதில் அவர் பதிவு செய்த யோகாவின் போஸ்கள் குறித்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அதே கடற்கரையில் அதே காஸ்ட்யூமில் ரம்யா பாண்டியன் இன்று சாதாரணமாக நடந்து செல்லும் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கடற்கரையோரம் அவர் நடந்து செல்லும் சாதாரண வீடியோ தான் என்றாலும் இந்த வீடியோ படமாக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங் வேற லெவலில் உள்ளது. குறிப்பாக கேமரா ஆங்கில் மற்றும் அபாரமான எடிட்டிங் காரணமாக ஒவ்வொரு ஷாட்டும் மேஜிக் ஷாட்டாக இருப்பதாக இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து இந்த வீடியோவை எடுத்த ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியாவுக்கும் எடிட்டருக்கும் நெட்டிசன்களின் பாராட்டு குவிந்து வருகிறது என்பதும் அதே போல் ரம்யா பாண்டியனின் நடை ஒரு ராணியின் நடை போல இருக்கிறது என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவில் ரம்யா பாண்டியன், ‘மிக நீண்ட பயணம் முதல் படியின் இருந்தே தொடங்குகிறது’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.