close
Choose your channels

ரம்யா பாண்டியனின் 'சூப்பர் பவர்' போட்டோஷூட்! வேற லெவலில் வைரல்!

Friday, June 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரம்யா பாண்டியன் என்பது தெரிந்ததே. இவர் ‘ஜோக்கர்’ மற்றும் ’ஆண்தேவதை’ உள்ளிட்ட ஒரு சில திரைப் படங்களில் நடித்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள புதிய போட்டோஷுட் புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ’தன்னம்பிக்கை மட்டுமே சூப்பர் பவர்’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் பதிவு செய்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பதும் அதில் பிக்பாஸ் போட்டியாளர் சம்யுக்தாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு வழக்கம்போல் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் சுவராசியமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.