பாவாடை தாவணி.. காதில் லோலாக்கு.. ரேவதியாகவே மாறிய ரம்யா பாண்டியன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரேவதி மாதிரியே காஸ்டியூம் அணிந்து, காதில் லோலாக்கு அணிந்து, அவருடைய பாடலுக்கு ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கார்த்திக் மற்றும் ரேவதி நடித்த ’கிழக்கு வாசல்’ என்ற திரைப்படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ’பச்சைமலை பூவு’ என்ற பாடல் 35 ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் கேட்கும் போதெல்லாம் ஒரு மயக்கத்தை வரவழைக்கும். அந்த அளவுக்கு, இளையராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் மக்களின் மனதை கவர்ந்த பாடல்களில் ஒன்று.
இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், இந்த பாடலுக்கு தோன்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில், இந்த பாடலும், ரேவதி மற்றும் கார்த்திக் ஆகியோரும், இந்த வீடியோவுக்கு தூண்டுதலாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ’இந்த பாடலை நான் எப்போதும் நேசித்து வருவேன். காரணமே இல்லாமல், இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் நெகிழ வைக்கும் ஒரு அமைதியான உணர்வு ஏற்படும். இந்த அழகான கனவுகளை உயிர்ப்பிக்க உதவிய எனது குழுவினருக்கு மனமார்ந்த நன்றி,’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு, அச்சு அசல் ரேவதி மாதிரியே இருக்கிறீர்கள்’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments