'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு ரம்யா பாண்டியன்.. கண்ணடித்து கொடுத்த போஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


25 ஆண்டுகளுக்குப் பிறகு ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ என்ற பாடல், அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மூலம் ட்ரெண்டான நிலையில் உள்ளது. இந்த நிலையில் அந்த பாடலுக்கு நடிகை ரம்யா பாண்டியன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
1999 ஆம் ஆண்டு, மம்முட்டி நடித்த ’எதிரும் புதிரும்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்தான் ’தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’. சிம்ரன் மற்றும் ராஜு சுந்தரம் அசத்தலாக நடனம் ஆடியிருக்கும் இந்த பாடல், வெளியான போதே மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
ஆனால் அதன் பிறகு, இந்த பாடலை ரசிகர்கள் மறந்து விட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாடலுக்கு ’குட் பேட் அக்லி’ படத்தில் ப்ரியா வாரியர் நடனமாடினார் என்பதும், அதன் பிறகு மீண்டும் இந்த பாடல் ட்ரெண்டானது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ டிரெண்டிங்கி பாடலுக்கு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது இடையில் அவர் கண்ணடிக்கும் காட்சியை பார்த்து, ரசிகர்கள் ஆவலுடன் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்ஸ்களாக பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com