புல்வெளிக்கு நடுவே தமிழ் பிக்பாஸ் நடிகை.. வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் 4 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதற்கு முன்பு தேசிய விருதுபெற்ற படமான “ஜோக்கர்”, “ஆண்தேவதை”, “டம்மி பட்டாசு” போன்ற படங்களில் இவர் நடித்து இருந்தார். ஆனால் விஜய் டிவி நிகழ்ச்சியான “குக்வித் கோமாளி“ மற்றும் “கலக்கப்போவது யாரு“, அதோடு “பிக்பாஸ் 4“ ஆவது சீசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளாமான ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சில எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதைத்தவிர வேறு எந்த புதிய படங்களில் ஒப்பந்தமாக நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபோது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் புல்வெளிக்கு நடுவே நிற்பது போன்ற போட்டோ ஷுட்டை நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.