எப்படி முடிந்தது? ரம்யாவின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து ஆச்சரியமடையும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,February 08 2021]

நடிகை மற்றும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் லேட்டஸ்ட் லுக்கை பார்த்து எப்படி இவரால் மட்டும் முடிந்தது? என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’, அமலாபால் நடித்த ‘ஆடை’ உள்பட ஒரு சில படங்களிலும் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தவர் ரம்யா சுப்பிரமணியம். இவர் கடந்த சில வாரங்களாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

அதில் நான்கு வாரங்களுக்கு முந்தைய தோற்றமும் தற்போது உள்ள தோற்றத்தையும் ஒப்பிடும் வகையில் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் நான்கு வாரத்தில் இரண்டரை கிலோ எடை குறைந்ததோடு இரண்டு இன்ச் சுற்றளவும் குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான உடற்பயிற்சி செய்தால் இது சாத்தியம்தான் என்று அவர் கூறியிருப்பதையும், அவர் பதிவு செய்த புகைப்படங்களையும் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து எப்படி ரம்யா உங்களால் முடிந்தது? இந்த உடல் எடை குறைப்பின் ரகசியம் என்ன? என்று கேட்டு வருகின்றனர். ரம்யா சுப்பிரமணியன் பதிவு செய்த இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

இணையத்தில் வைரலாகும் ஒற்றைச் சொல் எஃப்.டி.ஐ? பிரதமர் அளித்த அதிரடி விளக்கம்!

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

'தளபதி 65' படத்தில் நடிக்கின்றாரா 'குக் வித் கோமாளி' புகழ்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் குக்'களும், சரி,

சசிகலாவை கொரோனாவுடன் ஒப்பிட்ட தமிழ் நடிகை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆன நிலையில் இன்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய வீரர்! குவியும் பாராட்டு!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்வேறு திருப்பங்களுடன் தற்போது நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் விஜய் பட நடிகை!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக மட்டுமின்றி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடப் போகிறது