காதலனின் திறமையைப் பார்த்து நெகிழ்ந்த ஆலியா பட்… வைரல் புகைப்படங்கள்!

பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் காதலித்து வருவதும் அவர்கள் அடிக்கடி சுற்றுலா சென்றுவருவதும் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஜோடி அவ்வபோது சுற்றுலா செல்லும் புகைப்படங்களைத் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆச்சர்யத்துடன் சில புகைப்படங்களை நடிகை ஆலியா தற்போது பதிவிட்டு இருக்கிறார்.

ஆலியா பட், ரன்பீர் கபீர் ஜோடி கடந்த 2020 இல் தங்களது காதலை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தினர். இதையடுத்து இவரும் ஜோடியாக சுற்றுலா சென்றுவரும் புகைப்படங்கள் அவ்வபோது சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தன. இந்நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கென்யாவிற்கு சென்றுள்ள இந்த ஜோடி அங்குள்ள மகாய் மாராவில் தங்கி பல்வேறு இனிமையான இயற்கை சூழலை அனுபவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நடிகை ஆலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் “என்னுடைய காதலரின் அபாரப் புகைப்பட திறமைக்கு முன்னால் சிக்கியது“ எனக் கூறி பல புகைப்படங்களைப் பதிவிட்டு உள்ளார். அதில் ஆலியாவை ரன்பீர் கபூர் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்திருப்பது தற்போது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ரன்பீர், ஆலியா பட் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஆலியாக எஸ்எஸ் ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படமான “ஆர்ஆர்ஆர்“ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சஞ்சய் லீலா பன்சாலியின் “கங்குபாய் கத்தியவாடி“ திரைப்படத்திலும் தங்களுடைய சொந்த தயாரிப்பான “டார்லிங்ஸ்“ திரைப்படத்திலும் நடிகை பிரியங்கா மற்றும் கத்ரினா கைஃப்புடன் இணைந்து “ஜுலே ஜாரா“ திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

மேலும் கரண் ஜோஹரின் “ராக்கி கவுர் ராணி கி பிரேம் கஹானி“ எனும் திரைப்படத்திலும் அவர் இணைந்து நடித்து வருகிறார். அதேபோல நடிகர் ரன்பீர் சிங், “பிரம்மாஸ்திரா“ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை ஷரத்தா கபூருடன் இணைந்து பெயரிடப்படாத திரைப்படத்திலும் அதேபோல “சந்தீப் ரெட்டி வாங்கா அனிமல்“ எனும் திரைப்படத்தில் நடிகர் அனில் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பு: பிக்பாஸ் தமிழ் நடிகை அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை இரண்டாம் முறையாக தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் அனுஷ்கா சர்மா… வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின்

'மாஸ்டர்', 'வலிமை' படத்திற்கு இடையிலான அபூர்வ ஒற்றுமை!

அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

டீக்கடையில் அமர்ந்து சிறுவனிடம் உரையாடிய முதல்வர்… வைரலாகும் புகைப்படம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

'வலிமை' தள்ளிப்போனதால் பொங்கலுக்கு ரிலீஸாகும் ஆறு திரைப்படங்கள்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்