close
Choose your channels

கீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டிலை அறிவித்த பிசி ஸ்ரீராம்!

Monday, June 24, 2019 • தமிழ் Comments

கடந்த ஆண்டு 'நடிகையர் திலகம்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'சீமராஜா', 'சர்கார்', 'சாமி2', 'சண்டக்கோழி 2' போன்ற படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், இந்த படத்திற்கு 'Rang De' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தில் தான் ஒளிப்பதிவாளராக பணிபுரிவதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் நாயகனாக நிதின் நடிக்கவுள்ளார்.

அட்லுரி வெங்கி இயக்கவுள்ள இந்த படத்தை நாகவம்சி தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு வெளிவரும் என்றும் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz