இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

'அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி, 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய திரைப்படங்களை இயக்கியதால் பெரும் புகழ் பெற்றார். இந்த நிலையில் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' அவருக்கு மிகுந்த மரியாதையையும் விருதுகளையும் பெற்று தந்த நிலையில் தற்போது அவர் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்தார். மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் ஒரே ஆண்டில் இரண்டு ரஜினி படங்கள்: ரசிகர்கள் குஷி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். 2000ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ரஜினிகாந்த் நடித்த 6 படங்கள் மட்டுமே வெளிவந்தது.

மதுமிதாவை அடுத்து இன்று வெளியேறும் போட்டியாளர் இவர்தான்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தனது அவசர குணத்தால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது செயலை கமல்ஹாசனும் சேரனும் நாகரீகமாக கண்டித்தனர்.

ராட்சசன்' படத்திற்கு விருது கிடைக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் விளக்கம்

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒருசில படங்களே சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவற்றில் ஒரு படமாக விஷ்ணுவிஷாலின் 'ராட்சசன்' படம் அமைந்தது என்பது தெரிந்ததே

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதி-காஜல் அகர்வால்?

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'Awe'. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வருபவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த மதுமிதா, கமல்ஹாசனிடம் பேசும்போது கூட