close
Choose your channels

இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!

Monday, August 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அட்டக்கத்தி' படத்தில் அறிமுகமாகி, 'மெட்ராஸ்' படத்தின் வெற்றி மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய திரைப்படங்களை இயக்கியதால் பெரும் புகழ் பெற்றார். இந்த நிலையில் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' அவருக்கு மிகுந்த மரியாதையையும் விருதுகளையும் பெற்று தந்த நிலையில் தற்போது அவர் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்தார். மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணிபுரிந்த அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.