close
Choose your channels
Kaatrin Mozhi

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, September 2, 2018 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் ரஞ்சித் தயாரித்த ஒரு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர் நடித்த திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் வரும் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர், ஆனந்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் காமெடி கிங் யோகிபாபுவும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஸ்ரீதர் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.