அனுஷ்காவுக்காக 'ரஞ்சிதமே' பாடகி மானஸி பாடிய பாடல்.. வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ’ரஞ்சிதமே’ என்ற பாடலை பாடிய பாடகி மானஸி தற்போது நடிகை அனுஷ்காவுக்காக பாடிய பாடல் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை அனுஷ்கா நடித்து வரும் திரைப்படம் மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. விவேக் எழுதிய பாடலை எம்எம் மானஸி பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை இசை அமைப்பாளர் ராதான் கம்போஸ் செய்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ’நோ நோ’ என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கியுள்ளார். ராதான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

காஷ்மீரில் நில அதிர்வு.. 'லியோ' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு? அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

 காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நேற்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி வரும் 'லியோ' பட குழுவினர்களுக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழ் உள்பட பான் இந்திய திரைப்படத்தில் இணைந்த ஷில்பா ஷெட்டி.. செம போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த பிரபல நடிகை.. போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த திரைப்படத்தின் டிக்கெட்டுகளை தியேட்டருக்கு வந்து விற்பனை செய்த நிலையில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியதால் ஒரு சில நிமிடங்களில்

கொஞ்சமாவது வளருங்கள்.. சுயபுத்தியே இல்லையா? விமர்சனம் செய்த ரசிகருக்கு வெங்கடேஷ் பட் பதிலடி..!

 குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் குறித்து ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு 'உங்களுக்கு சுய புத்தி இல்லையா? கொஞ்சமாவது வளருங்கள்'

அது உன் தங்கச்சி ப்ரண்டு.. நடிகரை எச்சரித்த தங்கை..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் ஹாட்டான புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு நடிகர் பிரேம்ஜி கமெண்ட் செய்துள்ள நிலையில் அந்த கமெண்ட்டுக்கு அது