close
Choose your channels

கோடை விடுமுறையில் வெளியாகும் சமந்தாவின் அடுத்த படம்!

Friday, April 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதேபோல் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த 'மஜிலி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜாவுடன் சமந்தா நடித்த 'ரங்கஸ்தலம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் சென்னை உள்பட முக்கிய நகரங்களிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'ரங்கஸ்தலம்' படம் தற்போது தமிழில் டப் ஆகி வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழில் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா வெளியிடவுள்ளார். "ரங்கஸ்தலம் படம் தயாரிப்பில் இருந்தபோதே அதன் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்து வந்ததாகவும், அந்த படத்தின் முக்கியமான சில சிறப்பு அம்சங்களை தன்னால் உணர முடிந்ததாக கூறிய ஞானவேல்ராஜா, வரும் கோடை விடுமுறை விருந்தாக, ‘ரங்கஸ்தலம்’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்".
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.