close
Choose your channels

பா.ரஞ்சித்-ஆர்யா படம்: ஃபர்ஸ்ட்லுகே அசத்தல்!

Wednesday, December 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் குத்துச்சண்டை குறித்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்த்ன் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

’சார்பட்டா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் ஆர்யா, அசல் குத்து சண்டை வீர்ராகவே மாறியுள்ளார். வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் ஆர்யாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தை அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து பா ரஞ்சித் இயக்கும் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில், ‘இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா’ என்று பதிவு செய்துள்ளார்

ஆர்யா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், காளி வெங்கட், சஞ்சனா நடராஜன், முத்துகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். முரளி ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.