close
Choose your channels

மேடையில் மனைவியை கிண்டல் செய்த எஸ்பிபி: அரிய வீடியோ வைரல்!

Tuesday, September 29, 2020 • தமிழ் Comments

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்கள், அவருடன் கலந்துகொண்ட அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் அவை கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்தது

அது மட்டுமின்றி எஸ்பிபியின் அரிய வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அந்த வகையில் எஸ்பிபி அவர்கள் தனது காதல் மனைவியை மேடையில் நகைச்சுவைக்காக கிண்டல் செய்த வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது

மேடை நிகழ்ச்சி ஒன்றில் எஸ் ஜானகி அவர்களுடன் எஸ்பிபி பாடிய போது அவருக்கு உதவி செய்வதற்காக பாடல் புத்தகத்தை அவருடைய மனைவி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது அவரை தோளோடு தோள் சேர்ந்து கட்டிப்பிடித்துக்கொண்ட எஸ்பிபி, ‘இவர்தான் என் உதவியாளர், மனைவி, எல்லாம் என்று அவர் கிண்டலும் கூறியது நகைச்சுவையாக இருந்தது

அதே மேடையில் மனைவியை மட்டுமின்றி சக பாடகி ஜானகியையும் அவர் நகைச்சுவைக்காக கிண்டலடித்தார். இவ்வளவு சின்ன புத்தகத்தில் பாடலை எழுதி வைத்துக் கொண்டு ஜானகி அம்மா எப்படி பாடுகின்றார் என்று தெரியவில்லை என்று ஜானகியையும் அவர் நகைச்சுவையாக கிண்டல் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz