close
Choose your channels

பாலிவுட் திரைப்படத்தில் ராஷிகண்ணா: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Saturday, December 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ராஷி கண்ணா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானாலும் அதன்பின்னர் தமிழ், தெலுங்கு திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தினார் என்பதும் பல வெற்றி படங்களை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி, சைத்தான் கே பச்சான் ஆகிய நான்கு தமிழ் படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகி வரும் ’யோதா’ என்ற திரைப்படத்தில் ராஷி கண்ணா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே திஷா பட்டானி என்ற பிரபல நடிகையும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’யோதா’ என்ற பாலிவுட் படத்தில் தான் இணைந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த படத்தின் குழுவினருடன் பணிபுரிய மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.