திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

அர்ஜுன் ரெட்டி' பட புகழ் விஜய் தேவரகொண்டா நடித்த 'கீதா கோந்தம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றி ரஷ்மிகாவுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தபோதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது.

ஆம், நடிகை ரஷ்மிகாவிற்கும் கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டிக்கும் நடக்கவிருந்த திருமணம் திடீரென நின்றுவிட்டது. ஏற்கனவே இந்த திருமணம் நடக்காது என்று வதந்தி கிளம்பி வந்த நிலையில் தற்போது இந்த வதந்தி உண்மையாகிவிட்டதாக தெரிகிறது.

ரஷ்மிகா, ரக்சித் ஷெட்டி ஆகிய இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி இருவரின் குடும்பத்திற்கு இடையிலும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதாகவும், எனவே கனத்த இதயத்துடன் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கீதா கோவிந்தம்' படத்தை அடுத்து தற்போது ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் இன்னும் சில வருடங்களுக்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

More News

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் கொடுக்கவிருக்கும் தேன் விருந்து குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

மும்தாஜூக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் உள்ள மும்தாஜ், ஐஸ்வர்யாவை விட ஆபத்தானவராகவே கருதப்படுகிறார். அன்பு என்ற ஆயுதத்தை வைத்து ஒவ்வொருவராக கார்னர் செய்து அவர் நடத்திய நாடகம்

ஜெயம் ரவியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

தமிழ் சினிமாவின் இளம் நாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அடங்க மறு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்றாயனுக்கு சிம்பு கொடுத்த 'மந்திர' புத்தகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்த போட்டியாளர் சென்றாயன். கடந்த வாரம் இவர் மக்களின் எதிர்ப்பை மீறி வெளியேற்றப்பட்டார்.

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

உலக திரையுலகில் தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் இந்திய சினிமா என்றால் இந்தி சினிமா என்ற அளவில் உலகமே நினைத்து கொண்டிருந்த நிலையில்