close
Choose your channels

சூர்யாவுக்கு  முதல்முறையாக ஜோடியாகும் கார்த்தி பட நாயகி!

Sunday, February 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூர்யா அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யா-ஹரி மீண்டும் இணையும் இந்த படத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ என்ற படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ராஷ்மிகா இந்த படத்தில் இணைவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.