close
Choose your channels

"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்" – நடிகை ராஷ்மிகா மந்தனா

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னை விட வடிவேலு கியூட்டாக இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு ரசிகர்களிடையே தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா பல இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. தெலுங்கில் தனது அழகான நடிப்பால் சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கன்னடத்திலும் அறிமுக நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக ராஷ்மிகா புதிய காஸ்டியூம்களை அணிந்து வெற்வேறு கோணங்களில் போட்டோ ஷீட் நடத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் அதிகளவு பகிரப் பட்டன.

நமது நெட்டிசன்கள் போகிற போக்கில் ராஷ்மிகாவின் முக பாவங்களை வடிவேலுவின் லுக்குடன் இணைத்து வைத்து மீம்ஸ்களை உருவாக்கி பிரபலப் படுத்தி விட்டனர். வடிவேலுடன் ஒப்பிடப் பட்ட மீம்ஸ்களை பார்த்த ராஷ்மிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியாது, வடிவேலு க்யூட்டாக இருக்கிறார்” என்று டிவிட்டும் செய்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.