தங்கத்தேரே நடந்து வருகுது… வைரலாகும் நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

நேஷனல் கிரஷ் என இளைஞர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொண்டு அசத்தலாக ரேம்ப் வாக் செய்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னட படத்தில் அறிமுகமாகி பின்பு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருந்த ‘கீதா கோவிந்தம்’ நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடித்திருந்த ‘புஷ்பா’ போன்ற திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன. இதனால் தமிழ், பாலிவுட் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் தமிழில் ‘சுல்தான்’ நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட்டில் நடித்துவரும் நடிகை ராஷ்மிகா மும்பையிலேயே தனி வீடு வாங்கி செட்டிலான தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற Lakme fashion week நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் கார் ஒன்றில் இறங்கி வந்து ஒய்யாரமாக ரேம்ப் வாக் செய்திருக்கிறார். கருப்பு மற்றும் சாண்டல் நிறத்தில் அணிந்திருந்த அவருடைய உடையும் படு அசத்தலாக இருந்தது. இதுகுறித்த வீடியோ சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடையே பாராட்டை குவித்து வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது “புஷ்பா 2” மற்றும் ”அனிமல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகிவரும் இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.